சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதம் விளாசியிருந்த கோலி, 928 தரப்புள்ளிகளுடன் தற்போது முன்னிலையில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மித் 36 ரன்களில் ஆட்டமிழந்ததால், 923 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் விளாசிய, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 12 இடங்கள் முன்னேறி, 5-ஆவது இடம் பிடித்துள்ளார். அஜிங்க ரஹானே ஆறாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களான பும்ரா 5-ஆவது இடத்திலும், அஸ்வின் ஒன்பதாவது இடத்திலும், முகமது ஷமி 10-ஆவது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!