[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

நடுவரிடம் குழந்தைபோல் அழுது அடம்பிடித்த கிறிஸ்கெய்ல் - வைரல் வீடியோ!

chris-gayle-makes-a-cry-baby-face-in-msl-2019

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, நடுவரிடம் குழந்தையைபோல் அழுது அடம்பிடித்த கிறிஸ் கெய்லின் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

தென்னாப்ரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டி ஒன்றில் முதல் ஓவரை வீசிய கிறிஸ் கெயில், நடுவரிடம்  LBW முறைக்கு வாதிட்டார். ஆனால் நடுவர் விக்கெட்டை வழங்கவில்லை. உடனடியாக தன்னை ஒரு குழந்தைபோல பாவித்து குழந்தை அழுது அடம்பிடிப்பதுபோல கெயில் மீண்டும் வாதிட்டார். 

கெயிலின் இந்த செயலைக் கண்ட நடுவர் தன்னையும் மறந்து வாய்விட்டு சிரித்தார். நடுவர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்தவர்களுக்கும், டிவியில் கிரிக்கெட்டை பார்த்தவர்களுக்கும் இது சிரிப்பை வரவழைத்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் அளவில் மிகப்பெரிய ஆளாக இருந்தாலும், கிறிஸ் கெயில் ஒரு குழந்தை தான் என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close