[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

“இந்திய அணியின் தேர்வுக் குழுவை மாற்ற வேண்டும்”- ஹர்பஜன் சிங் சாடல்..!

need-strong-people-harbhajan-singh-slams-selectors-for-dropping-sanju-samson

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் நல்ல பலம் வாய்ந்த ஆட்கள் இடம் பெற வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரிஷப் பன்ட் மீண்டும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பன்ட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாம்சன் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்வுக்குழுவினர் சாம்சனின் மன உறுதியை சோதிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் நல்ல பலம் வாய்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். பிசிசிஐ தலைவர் கங்குலி இதனை சரிய செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close