[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பாபர் அசாம் போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

australia-finish-off-pakistan-to-claim-victory-in-brisbane

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடந்து வந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 580 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 340 ரன்கள் முன்னிலை பெற்றது. டேவிட் வார்னர் 154 ரன்களும் லபுஸ்சேக்னே 185 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷகின் ஷா அப்ரிதி, ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 

சிறிது நேரம் தாக்குப் பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து பாபர் அசாமுடன் இணைந்தார் முகமது ரிஸ்வான். இருவரும் நிலைத்து நின்று போராடினர். சதம் அடித்த பாபர் 104 ரன்களிலும் ரிஸ்வானும் 95 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த யாசிர் ஷா 42 ரன்கள் சேர்த்தார். வேறு யாரும் நின்று ஆடாததால், 335 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close