[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் நியூசி.வீரர் வாட்லிங்!

bj-watling-double-ton-mitchell-santner-hundred-leaves-england-on-the-ropes

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வாட்லிங் இரட்டை சதம் விளாசி னார். சன்ட்னர் சதம் அடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட், மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று, ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் 119 ரன்களுடனும் சன்ட்னர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய சன்ட்னர் சதம் அடித்தார். அவருக்கு இது முதல் டெஸ்ட் சதம் ஆகும். அவர் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய வாட்லிங், இரட்டை சதம் அடித்தார். 7 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 250 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆர்ச்சர் பந்துவீச்சில் 205 ரன்கள் எடுத்த நிலையில் வாட்லிங் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close