[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்: ரோகித்துக்கு ரெஸ்ட், வருவாரா தோனி?

rohit-sharma-workload-samson-in-focus-ahead-of-squad-selection-for-west-indies-series

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனி அணியில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் இந்த தொடருக்கான அணி தேர்வு இன்று நடக்கிறது.  இதில், அதிக போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட உள்ளார்.

நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த தோனி, இந்த தொடரில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் அவர் வலைபயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தோனிக்கு மாற்று என தேர்வுக்குழுவால் கூறப்படும் ரிஷப் பந்த் சமீபத்திய போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் தோனி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close