[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

பங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

india-beats-bangladesh-by-innings-and-130-runs

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது. 

இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்பிகுர் ரஹிம் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர், முதலாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பங்களாதேஷ் அணியில் அபு ஜெயத் 4 விக்கெட்களை சாய்த்தார். 

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. முஸ்பிகுர் ரஹிம்(64), மெஹதி ஹசன்(38) மற்றும் லிட்டன் தாஸ்(35) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 

இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களை சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close