[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

அணி தாவினார் ரஹானே: ஐபிஎல் வீரர்கள் அதிரி புதிரி மாற்றம்!

ajinkya-rahane-to-leave-from-rajasthan-royals

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், டெல்லிக்கு அணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மாறினார். இந்நிலையில், ரஹானேவும் மாற்றப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன். 2011 ஆம் ஆண்டில் இருந்து அந்த அணியில் ஆடி வந்த ரஹானே, கேப்டனாகவும் இருந்தார். கடந்த தொடரில் அந்த அணி, தொடர் தோல்வியைத் தழுவியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவரை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது. 

(கிருஷ்ணப்பா கவுதம்)

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியில் ஏற்கனவே ஷிகர் தவன், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட், ஹனுமா விஹாரி ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் ரஹானேவும் சேர்ந்துள்ளார்.

இதற்கிடையே பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அங்கித் ராஜ்புத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், பஞ்சாப் அணிக்குச் செல்கிறார். டெல்லி அணியில் விளையாடி வந்த நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், மும்பை இண்டியன்ஸ் அணிக்குச் செல்கிறார். மும்பைக்காக ஆடி வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸை அந்த அணி விடுவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close