இந்தியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த இந்திய அணி, உள்நாட்டில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. கேப்டன் விராத் கோலி, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். உள்ளனர். பந்துவீச்சில் ஷமி, அஸ்வின், ஜடேஜா மிரட்டுகிறார்கள்.
பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவுதான் என்றாலும் கடுமையாக போராடுவார்கள். ’ஷகிப் இல்லாதது அணியில் 2 வீரர்களை இழந்தது போல் உணர்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார், புதிய கேப்டன் மொமினுல் ஹக். அந்த அணியில் முஷிபிகுர் ரஹிம், மகமத்துல்லா, கேப்டன் ஹக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்