[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

’இதுக்கு கருடபுராணத்துல...’: கோட்டை விட்ட ரிஷாப்பை கலாய்க்கும் ரசிகர்கள்!

pant-s-bad-day-behind-stumps-invites-dhoni-comparisons-hilarious-memes-on-twitter

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் நடந்துகொண்ட விதத்தை வைத்து, அவரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஷிகர் தவான் 41 (42) ரன்களும் ரிஷாப் 27 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டி-20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ் அணி.

இந்தப் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்புகளை இந்திய அணி நழுவவிட்டது. முஷ்பிகுர் 6 ரன்னில் இருந்த போது சாஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ரோகித் சர்மா, ரிவியூ கேட்கவில்லை. டிவி ரீப்ளேவில் அது அவுட் என தெரிந்தது. இதை சரியாகக் கணித்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவிக்கவில்லை. 

இதே போல சவும்யா சர்கார் ஆடும்போது, சாஹல் வீசிய 10 வது ஓவரின் கடைசி பந்து பேட்டில் பட்டு வந்தாக நினைத்து, அதைப் பிடித்த ரிஷாப், ரிவ்யூ (DRS) கேட்கச் சொன்னார். கேப்டன் ரோகித், பந்துவீசிய சாஹல் ஆகியோர் நம்பிக்கை இல்லாமல் இருக்க, ரிஷாப் அடித்துச் சொன்னதை நம்பி கேட்டார் ரோகித். ஆனால், தவறாகிவிட்டது. இதனால் கடுப்பான ரோகித், ’என்னயா இப்படி பண்ணிட்டே?’ கிண்டல் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

இதைக் குறிப்பிட்டு ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் ரிஷாப்பை கலாய்த்து வருகின்றனர். ‘தோனி ஏன் தேவை என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?’ என்று சிலர் கேட்டுள்ளனர். தோனிக்கு மாற்றாக ரிஷாப்பை களமிறக்கியபோது நான் இப்படித்தான் சிரித்தேன் என்று சிலர் சினிமா பட சிரிப்பு காட்சிகளை இணைத்துள்ளனர். சிலர், ’DRSன்னா தோனி ரிவ்யூ சிஸ்டம்னு அர்த்தம்’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இதையடுத்து காமெடியான மீம்களை உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒன்று, ’இதுக்கு கருடபுராணத்துல என்ன தண்டனை தெரியுமா?’ என்பது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close