[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

'நாங்க தப்பு பண்ணிட்டோம்': தோல்விக்குப் பின் ரோகித் சர்மா!

we-made-mistakes-on-the-field-rohit-sharma

பீல்டிங்கில் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஷிகர் தவான் 41 (42) ரன்களும் ரிஷாப் 27 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்களும் சவுமியா சர்கார் 39 (35) ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், டி-20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ் அணி.

இந்தப் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்புகளை இந்திய அணி நழுவவிட்டது. முஷ்பிகுர் 6 ரன்னில் இருந்த போது சாஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ரோகித் சர்மா, ரிவியூ கேட்கவில்லை. டிவி ரீப்ளேவில் அது அவுட் என தெரிந்தது.

அடுத்து முஷ்பிகுர் 38 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை குணால் பாண்ட்யா நழுவவிட்டார். பந்து அவர் கையில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இந்த தவறுகளும் பங்களாதேஷ் அணிக்கு சாதகமாக மாறி ஆகிவிட்டது.

இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ’நாங்கள் எடுத்தது போதுமான ஸ்கோர்தான். ஆனால், பீல்டிங்கில் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். தவறு எங்கள் பக்கம்தான். இதெல்லாம் பாடம். இதில் இருந்துதான் கற்றுக்கொள்வோம். பங்களாதேஷ் அணி, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. டி-20 போட்டிகளுக்கு சாஹல் முக்கியமான வீரர். அவரது முக்கியத்துவம் மிடில் ஓவர்களில் தெரிந்தது. அவர் நம்பிக்கையுடன் ஆடினார்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close