[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

வங்கதேசம் ஒன்றும் சாதாரண அணியல்ல - ரோஹித் சர்மா

bangladesh-is-not-an-easy-team-to-defeat-says-indian-captain-rohit-sharma

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் இந்திய அணிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாளை வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. டெல்லியில் நிலவும் காற்று மாசால் வங்கதேச அணியினர் முகக் கவசம் அணிந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் டி20 போட்டி காற்று மாசுபாட்டால் ரத்தாகும் என்ற செய்தி பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்" என கூறியிருந்தார்.

Imageஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா "டெல்லியில் இருக்கும் காற்று மாசு குறித்து எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் நாளை நிச்சயம் போட்டி நடக்கும் என்பது மட்டும் தெரியும். கடந்த முறை இதேபோன்ற காற்று மாசு சூழலில் இலங்கை உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை" என தெரிவித்தார்.

Imageமேலும் தொடர்ந்த ரோஹித் சர்மா "ஒரு கேப்டனாக என்னுடைய பணி மிகவும் எளிமையானது. விராத் உருவாக்கியிக்கும் அணியை அப்படியே கொண்டு செல்ல வேண்டும், அவ்வளவே. வங்கதேசம் அணி ஒன்றும் சாதாரண அணியல்ல. அவர்கள் எப்போதும் சிறப்பாகவே விளையாடக் கூடியவர்கள். பல முறை இந்திய அணிக்கு வங்கதேசம் சவாலாக இருந்துள்ளது. ஷகிப் மற்றும் தமீம் இக்பால் அணியில் இல்லாதது வங்கதேசத்துக்கு பின்னடைவுதான். ஆனாலும் வங்கதேசத்தை பலமான அணியாகவே கருதுகிறோம்" என்றார் அவர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close