[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

‘விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு’- டெல்லி போலீஸ் முடிவு

virat-kohli-and-team-india-under-terror-threat-delhi-police-asked-to-tighten-security-report

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட சிலருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தேசிய விசாரணை அமைப்புக்கு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கடிதம் ஒன்று வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து, அனைத்திந்திய லஷ்கர் இ தொய்பா என்ற பெயரில் வந்துள்ள அந்தக் கடிதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல் கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேசிய விசாரணை அமைப்பு அனுப்பியுள்ளது. இதையடுத்து டெல்லியில் நவம்பர் 3 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கடிதம் பொய்யான வதந்தி என்று டெல்லி காவல்துறை வட்டாரம் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கடிதம் பொய்யான கடிதமாக இருந்தாலும் டெல்லி காவல்துறை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கும் அவரது வீட்டிற்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கி வரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும்,  ஒவ்வொரு வீரரின் வீட்டிற்கு தனிப்பட்ட வகையில் டெல்லி வட்டார போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close