பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் மோதிய இந்திய இணைத் தோல்வியைத் தழுவியது.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், ஜப்பானின் ஹிரோயுகி என்டோ மற்றும் யுடா வாடானபே இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஜிடியான் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவுடன் நேற்று மோதினர். இந்தப் போட்டியில் கடுமையாகப் போராடியும் தோல்வியைத் தழுவியது இந்திய இணை. இதையடுத்து இந்தோனேஷிய இணை, தங்கத்தையும் இந்திய இணை வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..!
மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-48
உள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை