[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டேவிட் வார்னர் அபார சதம்: இலங்கையை மிரட்டியது ஆஸி!

aus-vs-srilanka-finch-warner-propels-australia-to-233

முதல் டி-20 போட்டியில், இலங்கை அணிக்கு 233 ரன்களை, ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டி-20 போட்டி, அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் லசித் மலிங்கா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஆரோன் பின்ச்-சும் டேவிட் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வார்னர் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட ஆரோன் பின்ச், 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் சண்டகன் பந்துவீச்சில் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் மூன்று சிக்சர்களும் எட்டு பவுண்டரிகளும் அடங்கும்.  அடுத்து மேக்ஸ்வெல், வார்னருடன் இணைந்தார். இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக மிரட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார், இலங்கை கேப்டன் மலிங்கா. பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் பலனில்லை. 

9.4 ஓவரில் 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி, 17.3 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது. மேக்ஸ்வெல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து, இலங்கை பந்துவீச்சாளர்களை வியப்படைய வைத்தார். கடைசி ஓவரில், ஷனகா வீசிய பந்தில் பெரேரா விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், மேக்ஸ்வெல். நின்று தாண்டவம் ஆடிய அவர், 28 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரி யுடன் 62 ரன்கள் குவித்தார். அடுத்து டர்னர் வந்தார்.

கடைசி ஓவரின், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து சதமடித்தார் வார்னர். அவர் 56 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச டி-20 போட்டியில் இது அவரது முதல் சதம். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close