[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

கோரிக்கை ஏற்பு: பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் வாபஸ்!

bangladesh-cricketers-call-off-strike

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தித் தருவது, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் சமமான ஊதியம் வழங்குவது உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்திருந்தனர்.

பங்களாதேஷ் அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. வீரர்களின் போராட்டத்தால், அந்த அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். 

இதுபற்றி ஷகிப் அல் ஹசன் கூறும்போது, ’எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதி கொடுத்திருக்கிறது. இதையடுத்து முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் விளையாடுவார்கள். இந்திய தொடருக்கானப் பயிற்சியிலும் வீர்ர்கள் பங்குபெறுவார்கள்’ என்றார். 

கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார். பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close