[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் 

india-vs-south-africa-3rd-test-india-declares-at-497-runs

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. 

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஞ்சியில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில்,தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுடன் துணை கேப்டன் ரஹானே இணைந்தார். இருவரும் சரிவில் இருந்து, இந்திய அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ரோகித், அபாரமாக சதம் அடித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே சதம் அடித்தார். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் அவர் அடித்த சதம் இது. டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 11வது சதம். மறுமுனையில் ரோகித் சர்மா 150 ரன்களை கடந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரஹானே, 115 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித்தும் ரஹானேவும் இணைந்து 4 வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்தனர். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இரட்டை சதம் அடித்து அசத்தினார். இரட்டை சதம் விளாசிய அடுத்த ஓவரிலேயே,  ரபாடா பந்தில் சிக்சர் அடிக்கும் முயற்சியில் நிகிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 212 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 28 பவுண்டரியும் 6 சிக்சர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து சாஹா 24 ரன்களுடனும், ரவீந்தர ஜடேஜா 51 ரன்களுடனும் வெளியேறினர். 

இறுதியாக வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அதிரடி காட்டினார். இவர் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் இவர் 10 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்களையும், ரபாடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close