[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

14 வருட காதலியை மணந்தார் டென்னிஸ் வீரர் நடால்!

rafael-nadal-marries-long-time-girlfriend-xisca-perello

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார் 

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் மேரி பெரேல்லா என்ற தனது பள்ளித் தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பெரேல்லா. 

இந்நிலையில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், தனது நீண்ட நாள் காதலி பெரேல்லோவை, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்று நடந்தது. 

ஸ்பெயினில் நடந்த இந்த திருமணத்தில் பிரபல டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் உட்பட சுமார் 350 விருந்தினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Rafael NadalGirlfriendPerello
Advertisement:
Advertisement:
[X] Close