[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

சதமடித்தார் ரஹானே ! வலுவான நிலையில் இந்தியா

rahane-hits-century-india-in-strong-position-against-sa

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 2 ஆம் நாள் ஆட்டத்தில் ரஹானே சதமடித்து அசத்தினார். 

Image

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் நின்று நிதானமாகவும் சரியான பந்துகளை விளாசியும் சரிந்த அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, பீடிட் பந்தை சிக்சருக்குத் தூக்கி, அபார சதமடித்தார்.

Image

இது அவருக்கு 6 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் அவர் அடித்துள்ள  3 வது சதம் இதுவாகும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரஹானே இன்று சதம் கடந்து அசத்தினார். இது இவருக்கு 11 ஆவது சதமாகும். ரோஹித் சர்மாவும், ரஹானேவும் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரஹானே, ரோஹித் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள், இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close