[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

“சாப்பிட காசில்லாமல் பானி பூரி விற்றேன்” - இரட்டை சதம் அடித்த யாஷஸ்வி

homeless-empty-stomach-double-century-yashasvi-jaiswal-creams-world-record-with-insatiable-hunger

இந்தியாவிலுள்ள உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை-ஜார்கண்ட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக யாஷஸ்வி ஜெயஷ்வால் (Yashasvi Jaiswal) என்ற 17 வயது இளம் களமிறங்கினார். 

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவரின் ஆட்டத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி 17 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில் இரட்டை சதம் கடந்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்தார்.

இவர் 17 வயது 292 நாட்களில் இரட்டை சதத்தை கடந்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் உள்ளூர் லிஸ்ட்-ஏ போட்டி ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். இதனால் கிரிக்கெட் உலகில் தற்போது யாஷஸ்விக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதனால் புகழின் உச்சிக்கு யாஷஸ்வி சென்றுகொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த இடத்தை அடைய இவர் கடந்து வந்த பாதை எளிதானதல்ல. 11 வயதில் மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாதோஹி பகுதிக்கு கிரிக்கெட் விளையாடி பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுகளை சுமந்துகொண்டு யாஷஸ்வி சென்றார். ஆனால் அவருக்கு அங்கே தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் பால் பண்ணை ஒன்றில் படுத்து உறங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை வெளியேறுமாறு கூறிவிட்டனர். அவர் அங்கே வேலை கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து யாஷஸ்வியின் பெற்றோர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தங்கள் உறவினர் ஒருவரிடம் உதவி கேட்டனர். அவரும் தங்குவதற்கு இடம் கொடுத்தார். ஆனால் நீண்ட நாட்கள் தங்கக் கூடாது என்று கூறிவிட்டார்.

இதனால் வேறு இடம் தேடி யாஷஸ்வி அழைந்தார். பின்னர் அவரது உறவினர் அங்கிருந்த இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் யாஷஸ்வியை பரிந்துரை செய்துள்ளார். அவர்கள் யாஷஸ்விக்கு இடம் கொடுத்தனர். அங்கே டெண்ட் அடித்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார். ஒருநாள், இரண்டு நாள் அல்ல. மூன்று வருடங்கள் அங்கே வசித்தார். அந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அவருக்கு தங்கிக்கொள்ள இடம் இருந்தாலும், வயிற்றுக்கு உணவில்லை. இதனால் பசியை போக்கிக்கொள்ள பகுதி நேரமாக பாணி பூரி விற்றார். அத்துடன் மைதானங்களில் பந்து பொறுக்கிபோடும் வேலையும் செய்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு பசியை போக்கிக்கொண்டார்.

இப்படி கடினமான வாழ்வை கடந்துகொண்டிருந்த யாஷஸ்வியின் பேட்டிங்கை, ஒருநாள் வாலா சிங் என்ற முன்னாள் இந்திய ‘ஏ’ அணியின் கிரிக்கெட் வீரர் கண்டார். யாஷஸ்வி பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட இவர், அவரிடம் சென்று பேசி ஸ்பான்ஸர் மற்றும் கோச்சிங் கொடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு யாஷஸ்வி சம்மதிக்க, அவரை தன்னுடனே மும்பை அழைத்துச் சென்றுவிட்டார். அன்று முதல் இன்று வரை மும்பையில் உள்ள வாலா சிங் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போல யாஷஸ்வி வசித்து வருகிறார். ஆனாலும் கண்டிப்பான கோச்சராக தான் வாலா இருந்து வருகிறார். இதுவரை மைதானத்தில் ஒருமுறை கூட யாஷஸ்வியை கூலிங் கிளாஸ் அணிய அவர் அனுமதித்தது இல்லையாம். தற்போது இரட்டை சதம் அடித்த பின்னர் கூலிங் கிளாஸ் அணிய அனுமதி வழங்கியிருக்கிறாம். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close