[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தலுகான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - வேல்முருகன்
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
  • BREAKING-NEWS வெப்பச் சலனத்தால் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்

‘வாழ்த்திய ஹர்பஜன்.. ஆதரவு கேட்ட கங்குலி..’ - சுவாரஸ்ய ட்வீட்  

sourav-ganguly-s-response-to-harbhajan-singh-s-congratulatory-tweet-will-transport-you-to-the-2000s

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. அப்போது கங்குலி தலைவர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.    

கங்குலியின் தேர்வு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “உங்களை உருவாக்கியதற்காக மேற்கு வங்கம் பெருமை கொள்கிறது” என அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாக உள்ளது குறித்து ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு கங்குலியும் பதில் அளித்துள்ளார். 

“நீங்கள் ஒரு தலைவர். மற்றவர்களைவிட அதிகாரமிக்க தலைவர். வருங்கால பிசிசிஐயின் தலைவராக வர இருப்பதற்கு வாழ்த்துகள். நீங்கள் மேலும் முன்னேற நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்க நன்றி பஜ்ஜூ.. இந்திய அணி போட்டிகளில் வெற்றி பெற ஒருமுனையிலிருந்து பந்து வீசியது போலவே உங்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close