[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

கேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி?

virat-kohli-to-become-2nd-captain-to-lead-india-in-50-tests

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் 2 வது டெஸ்ட் போட்டி, கேப்டனாக விராத் கோலிக்கு 50 வது டெஸ்ட் போட்டியாகும்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் இந்திய அணி, பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. முதல் முறையாக டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து மிரட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். அவர்கள் தங்கள் அதிரடியை, இந்தப் போட்டியிலும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். புஜாரா, விராத், ரஹானே ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள்.

பந்து வீச்சில், அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை யும் சாய்த்தனர். ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசினார். அவர்கள் இந்தப் போட்டியிலும் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால், உள்ளூரில் தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும். அதோடு விராத் கோலிக்கு கேப்டனாக, இது 50 வது டெஸ்ட் போட்டி. இதற்கு முன் தோனி, 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல் பட்டு ள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில், டீன் எல்கர், கேப்டன் டுபிளிசிஸ், குயின்டன் டி காக், செனுரன் முத்துசாமி ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். கடந்த போட்டியில் எல்கரும் டி காக்கும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினர். ஆனால் அந்த அணி யின் பந்துவீச்சு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், அதை சரிகட்ட இன்றைய போட்டியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close