[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நடிகையின் கிண்டலுக்கு நகைச்சுவையாக பதிலளித்த ஹர்திக் பாண்டியா

brazilian-model-pulls-hardik-pandya-s-legs-after-spotting-something-unusual-in-post-surgery-picture

அறுவை சிகிச்சை குறித்த நடிகையின் கிண்டல் கேள்விக்கு நகைச்சுவையாக ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  ஹர்திக் பாண்டியாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20  தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த  ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்துள்ளது.  

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20ஓவர் தொடரின் போது முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்தவாறே புகைப்படம் வெளியிட்டு அறுவை சிகிச்சை குறித்து டவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்களின் ஆசிர்வாதங்களுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்” என தெரிவித்திருந்தார்.

அவரது பதிவுக்கு பதில் அளித்திருந்த ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். ஹர்திக்கின் பதிவுக்கு எதிர் கேள்வி கேட்ட பாலிவுட் நடிகை இசபெல்லா, ''நீங்கள் கையில் கடிகாரத்துடன் தான் அறுவை சிகிச்சை செய்தீர்களா?'' என நகைச்சுவையாக கேட்டார். அதற்குப் பதிலளித்த ஹர்திக் பாண்டியா ''ஹாஹா... எப்பொழுதும்'' எனப் பதிலளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close