[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு!

sa-vs-ind-ist-test-target-395-for-south-africa-after-rohit-ton

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றி இலக்காக 395 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையி லான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்தி ருந்தனர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. 

மயங்க் அகர்வால் 7 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் புஜாரா இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். 81 ரன்கள் எடுத்திருந்த போது பிலாண்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் புஜாரா. அடுத்து ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா மீண்டும் சதம் விளாசினார். அவர் 7 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். அவர், முதல் இன்னிங்ஸை போலவே, இந்த இன்னிங்ஸிலும் கேசவ் மகாராஜ் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜடேஜாவும் விராத் கோலியும் விரைவாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். ஜடேஜா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 31 ரன்களும் ரஹானே 27 ரன்களும் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.  இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.  மார்க்ரம் 3 ரன்னுடனும் தியூனிஸ் டி புருயின் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close