[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

மீண்டும் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல்

rohit-sharma-slashes-century-again

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ரோகித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் முதல் இன்னிங் ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. மயங்க் அகர்வால் 7 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். 81 ரன்கள் எடுத்திருந்த போது பிலாண்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் புஜாரா. அடுத்து ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா மீண்டும் சதம் விளாசினார். அவர் 7 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸை போலவே, இந்த இன்னிங்ஸிலும் கேசவ் மகாராஜ் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்ட மிழந்தார்.

ஜடேஜா 19 ரன்களுடனும் விராத் கோலி 2 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி, 4 மணி நிலவரப்படி, 318 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close