[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை

ravindra-jadeja-beats-mitchell-johnson-and-wasim-akram-to-register-massive-test-record

அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். 

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான இன்று ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி சதம் கடந்த எல்கர் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 200ஆவது விக்கெட்டை எடுத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200ஆவது விக்கெட் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.        

இடது கை பந்துவீச்சாளர்கள் 200ஆவது டெஸ்ட் விக்கெட்டிற்கு எடுத்த போட்டிகள் 
ஜடேஜா 44 போட்டிகள்
ஹெரத் 47 போட்டிகள்
மிட்சல் ஜான்சன்     49 போட்டிகள்
ஸ்டார்க்   50 போட்டிகள்
வாசிம் அக்ரம்  51 போட்டிகள்

   
 இதற்குமுன்பு இலங்கை வீரர் ஹெரத் தனது 47ஆவது டெஸ்ட் போட்டியில் 200ஆவது விக்கெட்டை கடந்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது. இதனைத் தற்போது ஜடேஜா முறியடித்துள்ளார். மேலும் இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை கடந்த இரண்டாவது வீரர் என்றார் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை ரவிசந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டிற்கு மேல் எடுத்த 10 இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். ஜடேஜா 156 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்களும் 44 டி-20 போட்டிகளில் 33 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close