இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர். ரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் 215 (371) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இந்தப் போட்டியில் 215 ரன்கள் சேர்த்தன் மூலம் தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய நான்கவது இந்திய வீரர் என்ற சாதனை மயங்க் அகர்வால் படைத்துள்ளார். அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனி நபராக ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரின் போது அடித்த 211 ரன்கள்தான், அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மயங்க் அகர்வால் இதனை தற்போது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5 வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார். இந்தாண்டு டெஸ்ட் போட்டியில் ஜேசன் ஹோல்டர் (202*), கேன் வில்லியம்சன்(200*), ஸ்டீவ் ஸ்மித்(211),ராஸ் டெய்லர்(200) ஆகிய நான்கு பேர் மயங்க் அகர்வாலுக்கு முன் இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!