[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

“எனக்கு சிஎஸ்கேவை பிடிக்கவே பிடிக்காது” - காரணத்தை போட்டுடைத்த ஸ்ரீசாந்த்

s-sreesanth-discloses-why-he-hates-chennai-super-kings

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சூதாட்ட புகாரில் சிக்கினார். இந்தப் புகாரில் திகார் சிறைக்கு சென்றதுடன் அவருக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் மீதான தடைக்காலத்தை உச்சநீதிமன்றம் குறைத்த நிலையில், மீண்டும் அடுத்த ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். 

        

இண்டியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பேடி உப்டன் உடனான சர்ச்சை குறித்து சிஎஸ்கே மீதான வெறுப்பு குறித்தும் விரிவாக பேசியுள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சேர்க்காததால் தன்னை கடுமையாக தாக்கிப் பேசியதாக பேடி தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீசாந்த் தன்னுடைய பேட்டியில், “பேடி உப்டன், உங்கள் இதயத்தை தொட்டு, உங்கள் குழந்தைகளின் தலையில் கை வைத்து சொல்லுங்கள்.. இந்திய அணியில் இருக்கும் போதோ அல்லது ஐபிஎல் தொடரின் போதோ உங்களை எப்போதாவது திட்டி இருக்கின்றேனா என்று? நான் அவருடன் சண்டையிட்டேனா என்பதை நான் மதிக்கும் டிராவிட் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். 

   

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தன்னை விளையாட அனுமதிக்குமாறு நான் பலமுறை வலியுறுத்தி கேட்டேன். அதற்கு காரணம் அந்த அணி உடனான பழைய போட்டிகள்தான். சிஎஸ்கேவை தோற்கடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் அதனை வேறுமாதிரியாக புரிந்து கொண்டார். சூதாட்டம் செய்யப் போவதாக அவர் புரிந்து கொண்டார். எல்லோருக்கும் தெரியும் நான் சிஎஸ்கே அணியை எவ்வளவு தூரம் வெறுக்கிறேன் என்று. அதை நான் சொல்லவே தேவையில்லை. 

              

தோனி அல்லது ஸ்ரீனிவாசன் ஆகியோர்தான் நான் சிஎஸ்கேவை வெறுக்க காரணம் என்று பலரும் சொல்வார்கள். ஆனால், அதுவெல்லாம் உண்மையில்லை. அந்த மஞ்சள் நிறத்தை மட்டுமே நான் வெறுக்கிறேன். மஞ்சள் நிறை ஜெர்ஸிக்காகதான் நான் ஆஸ்திரேலிய அணியையும் வெறுத்தேன். சிஎஸ்கேவுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். அதனால்தான் அந்த அணியுடன் விளையாட விரும்பினேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close