[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்

gautam-gambhir-takes-a-dig-at-virat-kohli-s-captaincy-says-he-only-does-well-because-of-ms-dhoni-and-rohit-sharma

தோனி, ரோகித் சர்மா அணியில் இருப்பதால்தான் சர்வதேச போட்டிகளில் விராட் கோலியால் கேப்டன்ஷிப்பை சிறப்பாக செய்ய முடிகிறது என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய போது, “விராட் கோலி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ரோகித் சர்மா மற்றும் தோனி அணியில் இருப்பதால் அவர் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் நீங்கள் தனியாக அணியை வழிநடத்தும் போது உங்கள் கேப்டன்ஷிப் திறமை வெளிப்படுகிறது. ஏனெனில் அங்கு உங்களுக்கு மற்ற வீரர்களின் துணை இல்லை. 

              

இதுகுறித்து பேசும்போது எல்லாம் நேர்மையுடன் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். ரோகித் சர்மா மும்பை இண்டியன்ஸ் அணிக்காகவும், தோனி சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காகவும் கொடுத்துள்ள வெற்றிகளை பாருங்கள். அவர்களுடைய வெற்றியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஒப்பிட்டு பார்த்தால் புரியும்” என்றார். 

                

அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார். “கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரோகித் சர்மாவை டெஸ்டில் தொடக்க வீரராக களமிறக்க வேண்டிய நேரம். அவரை அணியில் தேர்வு செய்தால் லெவன் அணியிலும் இடம்பெற வேண்டும். அவருக்கு விளையாட தகுதியில்லை என்றால், 15 பேர் கொண்ட அணியிலும் சேர்க்க தேவையில்லை” என்று காம்பீர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close