[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

விராத் அண்ட் கோவுடன் இணைந்த ராகுல் டிராவிட்!

rahul-dravid-joins-virat-kohli-co-in-india-s-practice-session

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்தினார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மொகாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு திடீரென்று வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட மணிஷ் பாண்டே, ஸ்ரேயா ஸ் ஐயர், குணால் பாண்ட்யா, ரிஷாப், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள னர். அவர்களிடமும் ராகுல் டிராவிட் உரையாடினார்.  ரவி சாஸ்திரியுடன் ராகுல் டிராவிட் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பெருமைக்குரியவர் கள் சந்திக்கும்போது...’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close