நெதர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில், ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சே, அதிரடியாக விளையாடி 56 பந்தில் 127 ரன்கள் குவித்தார்.
அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 தொடர் நடந்துவருகிறது. டப்ளினில் நேற்று நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சேவும் கேப்டன் கோயட்ஸரும் களமிறங்கினர். இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கோயட்ஸர் 50 பந்துகளில் 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரிங்டன் தன் பங்குக்கு 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் முன்சே, அதிரடியாக ஆடி 40 பந்துகளில் சதமடித்தார். அவர் 56 பந்துகளில் 14 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் டி-20 வரலாற்றில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 3 இடத்தை அவர் பிடித்தார். ஆப்கானின் வீரர் ஹஸத் துல்லா ஸசாய் 16 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் உள் ளார். அதே போல ஸ்காட்லாந்து அணி நிர்ணயித்த இந்த 252 ரன்கள், டி-20 வரலாற்றில் 6 வது அதிகப்பட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 253 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது நெதர்லாந்து அணி. அந்த அணியில் கேப்டன் சீலர் 49 பந்துகளில் 96 ரன்களும் விக்கெட் கீப்பர் எட்வர்ட்ஸ் 37 ரன்களும் விளாசினர். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணியால் 194 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது.
காவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய காவலர் கைது - தகாத உறவால் பிரச்னை
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை
மக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா !
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..
“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை