இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 மழையால பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. இதில் முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் தர்மசாலாவில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே தர்மசாலா மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இன்றும் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கடந்த இருநாட்களாக பெய்த வந்த மழை காரணமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி உள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. ஆகவே இந்தத் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தீர்மானிப்பதற்கு முக்கியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!