[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

டேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்?

india-pakistan-davis-cup-tie-likely-in-november-end

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் 'டை' (tie) சுற்று நவம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வரும் செப்டம்பர் 14, 15ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்திய டென்னிஸ் அணி கடந்த 55 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் செல்வதாக கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் 'டை' (tie) சுற்று நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அல்லது நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவம்பர் நான்காம் தேதி பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்படும் என அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close