[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

“இது வெறும் வதந்தி” - தோனியின் மனைவி பதில்

its-called-rumours-dhoni-wife-sakshi-twitted

தோனி ஓய்வு தொடர்பான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் ‘இது வெறும் வதந்தி’ என தோனியின் மனைவி சாக்‌ஷி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். அதில், தோனியுடன், விராட் கோலி வெற்றிக் களிப்பில் இருப்பது போல் படத்தை பதிவிட்டார். அத்துடன், “என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி. ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப் போல் இந்த மனிதர்(தோனி) என்னை ஓட வைத்தார்” என்றும் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

விராட் கோலியின் இந்த ட்விட்டர் பதிவு, தோனி தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புரிந்துக் கொண்டனர். கோலியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் எதிர்வினையும் ஆற்றி வருகின்றனர். தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அத்துடன் இன்று இரவு 7 மணிக்கு தோனி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது.

இதுதொடர்பாக விளக்கமளித்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ஓய்வு குறித்து தோனி எந்தவொரு தகவலையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் தோனியின் மனைவி சாக்‌ஷி, ‘இது வெறும் வதந்தி’ என தெரிவித்திருக்கிறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close