[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு

indian-cricket-team-for-paytm-freedom-series-for-gandhi-mandela-trophy-announced-indvsa

தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது டி-20 போட்டி தர்மசாலாவில் வரும் 15 ஆம் தேதியும், 2-வது போட்டி மொகாலியில் 18 ஆம் தேதியும், 3-வது போட்டி பெங்களூருவில் 22 ஆம் தேதியும் நடக்கிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2 ஆம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10 ஆம் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19- ஆம் தேதியும் நடக்கிறது.

              

இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, டெல்லியில் இன்று கூடி அணியை தேர்வு செய்தது. ஷிகர் தவான், கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறவில்லை. ரோகித் சர்மா, சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

             

அணி விவரம்:

விராட் கோலி
ரோகித் சர்மா
சடேஸ்வர் புஜாரா
அஜிங்கியா ரகானே(துணைக் கேப்டன்)
மயங்க் அகர்வால்
ஹனுமா விஹாரி
ரிஷப் பண்ட்(கீப்பர்)
சாஹா(கீப்பர்)
அஸ்வின்
ஜடேஜா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
ஜஸ்பிரிட் பும்ரா
இஷாந்த் சர்மா
சுப்மன் கில்

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close