[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

டெல்லிக்கு மாறுகிறார் அஸ்வின், பஞ்சாப் கேப்டனாகிறார் ராகுல்!

kings-xi-punjab-skipper-ashwin-set-to-play-for-delhi-capitals-in-ipl-2020

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஸ்வின், டெல்லி அணிக்கு மாறுகிறார். பஞ்சாப் கேப்டனாக, கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கடந்த 2 தொடர்களாக செயல்பட்டு வந்தார் அஸ்வின். ஐபிஎல் தொடரில், மொத்தம் 139 போட்டி களில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

அஸ்வின் கேப்டனாக செயல்பட்ட 2 ஐபிஎல் தொடர்களில், லீக் சுற்றோடு பஞ்சாப் வெளியேறியது. அதோடு புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரோடு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புதிய கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளது.

இதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அஸ்வினுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

இந்நிலையில் அஸ்வினை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close