[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஒரு புள்ளியில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்

steve-smith-edges-past-virat-kohli-to-become-no-1-test-batsman

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் சிறந்த வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் திகழ்கின்றனர். யார் சிறந்த வீரர் என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் சம அளவிலான பலத்துடன் விளையாடி வந்தாலும், ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியும், டெஸ்டில் ஸ்மித்தும் முன்னிலை பெற்று வந்தனர்.

          

இந்த நிலையில்தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 2015 டிசம்பர் முதல் டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஸ்மித் மீது விதிக்கப்பட்ட தடைக்கு பின், அந்த இடைத்தை விராட் கோலி பிடித்தார். தொடர்ச்சியாக விராட் கோலி முதலிடத்தில் இருந்து வந்தார். டெஸ்ட் தரவரிசையை பொறுத்தவரை விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் இடையேதான் கடும் போட்டி நிலவும்.

        

இதனையடுத்து, ஓராண்டு தடை முடிந்து மீண்டும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் விளையாடி வருகிறார். இவர் ஆஷஸ் தொடரில் 3 இன்னிங்ஸில் மட்டும் விளையாடி 378 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியாக சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி முறையே 9,51,76,0 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில்தான், ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலியை காட்டிலும் ஒரு புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்மித் 904, கோலி 903 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 825 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரகானே 725 புள்ளிகளுடன் 7 இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 வீரர்களில் இந்தியர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர். 

      

ஸ்மித் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதம் உட்பட 6577 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 79 போட்டிகளில் விளையாடி 25 சதம் உட்பட 6749 ரன்கள் எடுத்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close