[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு : மிதாலிராஜ் அதிரடி அறிவிப்பு

mithali-raj-announces-retirement-from-t20-internationals

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

2006 ஆம் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக டி20 போட்டியில் விளையாடிய போது கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ். அவர், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 அரைசதமும் அடங்கும். இதுவரை 32 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தாண்டு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்றப் போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் 32 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

                  

இந்நிலையில் மிதாலி ராஜ் ஓய்வு முடிவு குறித்து பிசிசிஐ-க்கு அனுப்பிய கடிதத்தில், “2006 முதல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். 2021 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் முழுக் கவனம் செலுத்த, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு இன்னும் உள்ளது. பிசிசிஐ எனக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

         

2018 உலகக் கோப்பை தொடரில் முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையாக உருவெடுத்தது. மிதாலி ராஜும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பேட்டிங் சராசரி குறைவாக இருப்பது அப்போது காரணமாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், டி20 அணிக்கான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close