[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

“தோனியைப் போல் விளையாடுங்கள் தோனி.. மற்றவர்களைப் போல் அல்ல” - கங்குலி 

ms-dhoni-has-to-evaluate-where-he-stands-sourav-ganguly-to-india-today

களத்தில் உள்ளவரை தன்னுடைய அந்த பாணியிலே தோனி விளையாட வேண்டும், மற்றவர்களைப் போல் அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 

இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அந்த விவாதம் அதிகரித்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், ஓய்வு குறித்து தோனி இதுவரை எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

                 

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விரிவாக பேசியுள்ளார். இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு பெரிய விளையாட்டு வீரரும் தன்னுடைய சகாப்தத்தை ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். கால்பந்தை எடுத்துக் கொண்டால் மாரடோனா தன்னுடைய ஆட்டத்தை ஒரு கட்டத்தில் முடித்துக் கொண்டார். அவரை விட பெரிய வீரர் யாரும் இருக்க முடியாது. சச்சின், லாரா, பிராட்மேன் என ஒவ்வொருவரும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படிதான் நம்முடைய அமைப்பு இருந்து வந்துள்ளது. அப்படிதான் இனியும் இருக்கும். அதுபோன்ற ஒரு தருணம் தற்போது தோனிக்கு வந்துள்ளது.

                          

தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மதிப்பிட வேண்டிய தருணத்தில் தோனி இருக்கிறார். இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுக்க முடியுமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை தொடரவேண்டும் என நினைத்தால் தோனியைப் போல்(தன்னை) அவர் விளையாட வேண்டும். மற்றவர்களைப் போல் அல்ல. தோனி, விராட் கோலி, சச்சின் போன்ற நட்சத்திர வீரர்கள் களத்தில் விளையாடும் வரை இந்திய அணிக்காக அவர்களுடைய பாணியில் விளையாடி வெற்றியைத் தேடித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 

                  

தன்னுடைய முடிவினை தோனிதான் எடுக்க வேண்டும். தன்னிடம் இன்னும் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதும், போட்டியை வெற்றி பெற வைக்கும் திறன் எவ்வளவு உள்ளது என்பதும் ஒரு வீரருக்குதான் தெரியும். இன்னும் எவ்வளவு நாள் அவர் விளையாடுவார் என்ற தகவலை பிசிசிஐ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கப் போவதில்லை. ஆனால், அத்தகைய முடிவினை தோனியேதான் எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

               

கங்குலி கேப்டனாக இருந்த போதுதான் 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் தோனி அறிமுகமானார். அதேபோல், கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அவருக்கு கேப்டன் பொறுப்பை அளித்து தோனி அழகு பார்த்தார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. தோனியை தொடர்ந்து ஆதரித்து வருபவர் கங்குலி. இருப்பினும், உலகக் கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் கங்குலிக்கு திருப்தி இல்லை என்றே தோன்றுகிறது. அதனால், இப்படியொரு விளக்கத்தை தோனியிடம் இருந்து கங்குலி எதிர்பார்க்கிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close