[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!

jasprit-bumrah-s-5-ajinkya-rahane-s-ton-headline-india-s-record-win

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்களும்
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில், 222 ரன்களும் எடுத்தது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. 3 வது நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில் 260 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது, இந்திய அணி.

இந்நிலையில் 4 வது நாளான நேற்று இந்திய வீரர்கள் பேட்டிங்கை தொடர்ந்தனர். போட்டித் தொடங்கியதுமே விராத் கோலி ஆட்டமிழந்தார். இதையடுத்து விஹாரி, ரஹானேவுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். நிதானமாக ஆடிய ரஹானே சதம் அடித்தார். இது அவருக்கு 10-வது சதம். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 102 ரன்களில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விஹாரி 93 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார். 7 ரன்களில் தனது முதலாவது செஞ்சுரி வாய்ப்பை அவர் இழந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக கெமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இந்திய தரப்பில், 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. 

இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close