[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

புதிய தோற்றத்தில் தோனி - வைரலாகும் புகைப்படம்

ms-dhoni-spotted-in-new-look-picture-goes-viral

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து அவர் சமீபத்தில் பயிற்சி பெற்றார். ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். 

           

கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பணியாற்றி வந்த அவருக்கு ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும்  பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சியின்போது நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் தோனி கொண்டாடினார். ராணுவப்பணி முடிவடைந்து தனது சொந்த ஊருக்கு தோனி திரும்பினார்.

            

இந்நிலையில், தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.  ராணுவத்தில் பணியாற்றும் போது வீரர்கள் தலையில் கறுப்பு நிற துணியை கட்டுவார்கள். அதேபோன்று, தோனியும் தலையில் கறுப்பு நிற துணி கட்டிருக்கும் போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது.

           

இதேதோற்றத்தில் தோனி விமான நிலையத்தில் வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close