[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்

west-indies-vs-india-1st-test-west-indies-opt-to-field

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி  அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிசர்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சஹா, ரோஹித் ஷர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மயாங் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close