[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்!

indian-rout-nz-5-0-to-win-oly-test-event

ஜப்பானில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் என்ற சர்வதேச ஹாக்கி போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிபோட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை அணியை, 5-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்திய அணியின் தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 7-வது நிமிடத்திலும், சாம்ஷெர்சிங் 18-வது நிமிடத்தி லும், நீலகண்ட சர்மா 22-வது நிமிடத்திலும், குர்சாகிப்ஜித் சிங் 26-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 27-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close