[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஹர்திக் பாண்ட்யா ஃபிட்நஸ் ரகசியம் - வீடியோ

hardik-pandya-fitness-secret-video

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் இளம் வீரரும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா, அதிரடி ஆட்டத்தில் மட்டுமின்றி உடலை  கட்டுமஸ்த்தாக வைத்திருப்பதிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்திய அணியில் ஃபிட் ஆன வீரர்களில் கேப்டன் கோலிக்கு சவாலாக இருக்கும் ஒரு வீரர் என்றால் அது ஹர்திப் பாண்ட்யாதான். வேகமாக ஓடுவது, தூரமாக சிக்ஸர் விளாசுவது, சிக்ஸ் பேக் என உடற்கட்டில் அசத்துகிறார். இத்தகைய உடற்கட்டை அவர் எளிதில் பெற்றுவிடவில்லை. அதற்காக அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். 

வீடியோவை காண கிளிக் செய்யுங்கள் (https://www.instagram.com/p/B1Q5YTSF81V/?utm_source=ig_web_button_share_sheet)

இந்நிலையில் அவர் ஜிம்மில் காலுக்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்ட்யா, ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் யாஸ்மின் கூறுவதையும் தாண்டி பயிற்சியை முடிக்கிறார். அத்துடன் மற்றொரு வீடியோவில் தனது சகோதரரும், இந்திய அணியின் வீரருமான குருனல் பாண்ட்யாவுடன் ஓடிக்கொண்டிருக்கிறார். 

ஹர்திக் பாண்ட்யா தனது உடற்கட்டை தக்க வைப்பதற்காக விழா நாட்கள் மற்றும் வாரக் கடைசியிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஓடும் போட்டியில், ஹர்திக் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close