[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மீண்டும் வருகிறார் அம்பத்தி ராயுடு!

rayudu-to-play-in-vap-trophy

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறார். 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

உலகக் கோப்பை தொடருக்கு, தான் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளிப்படையாகவே  அதிருப்தியை அம்பத்தி ராயுடு தெரிவித்தார். அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து ஐசிசி கூட அதிருப்தியை தெரிவித்து இருந்தது.

   

இதையடுத்து, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ராயுடு ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில், விளையாட இருக்கிறார். இந்தத் தொடர் வரும் 19 ஆம் தேதி சென்னையில் தொடங் குகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close