[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் 

karnataka-boy-swims-for-2-5km-in-floodwater-to-meet-the-team-for-wrestling-championship

 

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பெலாகவி மாவட்டத்தில் உள்ள மன்னூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது குத்துச் சண்டை வீரரான நிஷான் மனோகர் கதம், தான் கலந்து கொள்ளயிருந்த போட்டிக்காக வெள்ளத்தில் நீந்திச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் மன்னூரை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நிஷான் மனோகர் கதம் ஒரு குத்துச்சண்டை வீரர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நிஷான் மனோகர் கடந்த 7ஆம் தேதி புறப்படத் தயாரானார். ஆனால் கனமழையின் காரணமாக கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளும் கடும் சேதம் அடைந்தன. 

இதனால் செய்வதறியாமல் திகைத்த நிஷானுக்கு அப்போது இருந்த ஒரே வழி வெள்ளத்தில் நீந்திச் சென்று சாலையை அடைவதுதான். இதையடுத்து நிஷான் மனோகரும் அவரது தந்தையும் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சல் அடித்து 45 நிமிடங்களில் வெள்ள நீரை கடந்தனர். அதன் பின்னர் பெங்களூரு சென்று போட்டியில் கலந்து கொண்ட நிஷான் மனோகர் கதம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close