[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி - அரைசதம் கடந்த கோலி 

virat-kohli-smashes-new-record-against-wi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷிகார் தவான் அவுட் ஆகினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இவரும் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்து வருகின்றனர். அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

இவர் இதற்கு முன்பு ஜாவித் மியாண்டட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்திருந்த 1930 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த கோலி அரைசதம் கடந்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விராட் கோலி 50 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close