இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 2 ரன்களில் அவுட் ஆகினார். இவரைத் தொடர்ந்து எல்வின் லூயிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெர்ட்மேயரும் 1 ரன்னில் வெளியேறினார். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த பொல்லார்டு மற்றும் பூரன் ஆகியோர் 4ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்த்தனர். பூரன் 17 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகினார். அதன்பின்பு தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பொல்லார்டு 45 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 58 ரன்களுடன் வெளியேறினார். 16 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ரோவ்மன் பவுல்(11) மற்றும் பிராத்வெட்(1) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து