[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

2-வது டி-20: வென்றது இந்திய அணி, ரோகித் சிக்சர் சாதனை!

krunal-pandya-rohit-sharma-take-india-to-unassailable-2-0-lead

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், இப்போது நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நேற்று பங்கேற்றது. இந்தப் போட்டியும் புளோரிடாவில் நடந்தது.

 டாஸ் வென்ற விராத் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். தவான் 23 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த விராத் கோலி 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா 51 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அவர் 3 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் விளாசினார். குணால் பாண்டியா கடைசி ஓவரில் அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஆட்டத்தை தொடர்ந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த அணியின்  தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் பூரன் 19 ரன்களில் வெளியேறிய நிலையில், ரோவ்மன் பவல் 34 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அந்த அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது. இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்த நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 22 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் இந்திய அணி தொடரை, 2-0 என கைப்பற்றியது. குணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி-20 போட்டி, வெஸ்ட் இண்டீசின் கயானாவில் நாளை நடைபெறுகிறது.

இந்த போட்டியில், அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ரோகித் சர்மா படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர்களை விளாசினார். இதன் மூலன் டி-20 போட்டிகளில் 105 சிக்சர்கள் விளாசியிருந்த கிறிஸ் கெய்லின் சாதனையை ரோகித் முறியடித்தார். டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ரோகித் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close