[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது இந்திய கிரிக்கெட் அணி  

india-equal-pakistan-s-unique-world-record-with-4-wicket-win-over-west-indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. 

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இறுதியில் பொல்லார்ட் (49) நிதான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சைனி 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ஷர்மா(24), கோலி(19), பாண்டே(19), ஆகியோரின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன்மூலம் அந்நிய மண்ணில் 50ஆவது டி-20 வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தச் சாதனையை இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. 

இதுவரை இந்திய அணி 116 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 71 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அணி 143 டி-20 போட்டிகளில் 90 வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக டி-20 போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளின் பட்டியலில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மேலும் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெறும் பட்சத்தில், அந்நிய மண்ணில் அதிக டி-20 போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணி என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close